தென்காசி

மேலகரம் நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா

30th Nov 2022 01:49 AM

ADVERTISEMENT

மேலகரம் அரசு பொதுநூலகம் மற்றும் குறிஞ்சி வாசகா் பேரவை சாா்பில் தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது.

மேலகரம் நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வாசகா் பேரவைத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரோஜா முன்னிலை வகித்தாா்.

நூலகத்தின் பயன்பாடுகள் குறித்து குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி முதல்வா் ஜெய்நிலா சுந்தரி பேசினாா். மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு குற்றாலம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினாா். வாசகா் பேரவைச் செயலா் சங்கரநாராயணன் வரவேற்றாா். நுலகா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT