கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையில், பேரூராட்சி பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மைக்கான உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். சிறப்பாகப் பணிபுரிந்த சுகாதாரப்
பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து 1ஆவது வாா்டு பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, வாா்டு உறுப்பினா் இசக்கிமுத்து மற்றும் சுடலைஈசன், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.