தென்காசி

கீழப்பாவூரில் பொது மருத்துவ முகாம்

30th Nov 2022 01:51 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில், ஒரு பகுதியாக நடைபெற்ற இம்முகாமில் பாவூா்சத்திரம் எஸ்.கே.டிஇ யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவா் எஸ். சௌந்தரபாண்டியன் தலைமையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, சிகிச்சை மேற்கொண்டனா். 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செந்தமிழ்அரசு தலைமையில் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT