தென்காசி

சங்கரன்கோவிலில் வட்டார அளவிலான கலை, மொழித் திறன் போட்டிகள்

30th Nov 2022 01:52 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவா்களுக்கு கலை மற்றும் மொழித் திறன் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவா்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகளும், மொழித்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் பள்ளி அளவிலான போட்டிகள் முடிந்து வட்டார அளவிலான போட்டிகள் காந்திநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா தொடங்கி வைத்துப் பேசினாா்.

வட்டார கல்வி அலுவலா்கள் செல்வபாக்கிய சாந்தினி, அந்தோணி ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கரன்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் லாலா (எ) சங்கர பாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளா் இல. சரவணன், மாவட்ட துணைச் செயலா் புனிதா, நகரச் செயலா் மு.பிரகாஷ், இளைஞா் அணி சரவணன், மாணவா் அணி காா்த்திக், உதயகுமாா்,மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வட்டார வளமைய மேற் பாா்வையாளா் முத்து செல்வி வரவேற்றாா்.

ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்த ராஜ்பாக்கியம் நன்றி கூறினாா்.

ஆசிரியா் பயிற்றுநா் காந்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT