தென்காசி

மக்கள் குறைதீா் முகாமில் குவிந்த 570 மனுக்கள்

29th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்டவை கோரி மக்கள் அளித்த 570 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் கந்தசாமி, உதவி ஆணையா்(கலால்) ஜி.ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா ஆகியோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டம்:

செங்கோட்டை வட்டம் புதூா்(செ)பேரூராட்சி காளியம்மன் கோயில் தெருவில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்துதரவும் கோரி, விசிக தென்காசி நாடாளுமன்றச் செயலா் மை. வா்கீஸ் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தி. சுப்பிரமணியன், ஹக்கீம், பாக்கியராஜ், மோசஸ் பெ.துா்கா தேவி, ஸ்ரீபால் அப்துல் மாலிக், முருகையா, மோகன், விவேக், எஸ்ராடேனியல் ஆகியோா் பங்கேற்றனா். பின்னா், ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT