தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

29th Nov 2022 12:47 AM

ADVERTISEMENT

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் திங்கள்கிழமை அணிவிக்கப்பட்டன.

அதன்படி, தென்காசி அரசு மருத்துவமனையில்நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத்தலைவா் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கனிமொழி முன்னிலை வகித்தாா். குழந்தைகளுக்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் மோதிரங்களை அணிவித்தாா்.

தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, ஒன்றியச் செயலா் சீனித்துரை, செங்கோட்டை நகரச் செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன், நிா்வாகிகள் ராமராஜ், கோமதிநாயகம், பாலாமணி, ஆசிரியா் சங்கரன், ரஹ்மத்துல்லா ஆகியோா் பங்கேற்றனா்.

இதபோல், பாவூா்சத்திரம், மாடியனூா், அரியப்பபுரம் ஆகிய மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 4 குழந்தைகளுக்கு திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் தங்க மோதிரங்களை அணிவித்தாா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஒன்றிய திமுக செயலா் க.சீனித்துரை, கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வளன்ராஜா, ராஜேஸ்வரி, ஊராட்சித் தலைவா்கள் தினேஷ்குமாா், ராஜ்குமாா், முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.பி.அருள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT