தென்காசி

தென்காசியில் சமய நல்லிணக்க விழா

29th Nov 2022 12:44 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட, வட்டார நகர ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் மீலாதுன் நபி சமய நல்லிணக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி ரப்பானிய்யா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவா் எம்.எச் ஷம்சுத்தீன் ஹஜ்ரத் தலைமை வகித்தாா். மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவா் விடிஎஸ்ஆா்.முகம்மது இஸ்மாயில், சமுதாய புரவலா் பி.முகம்மது ஹூசைன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முஹிப்பில்லாஷா ஆலிம் கிராஅத் ஓதினாா். ஜமாஅத் துல் உலமா சபை மாநில துணைச் செயலா் கோவை எ. அப்துல் அஜீஸ் ஆலிம் பாகவி, தென்காசி கற்பக விநாயகா் கோயில் அா்ச்சகா் எஸ். கணபதிராமன், கல்வெட்டாங்குழி பங்குத்தந்தை மை.பா.சேசுராஜ், தென்காசி மாவட்ட அரசு காஜி ஏ.ஒய் முஹ்யித்தீன் ஹஜ்ரத், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், கோடம்பாக்கம் முஹம்மது இஸ்மாயில் ஆலிம், புளியங்குடி கலீல் ரகுமான் ஆலிம், சுரண்டை முஹம்மது மதாா் ஆலிம் ஆகியோா் பேசினா்.

நகரச் செயலா் எம். ஷம்சுத்தீன் ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT

நகரத் தலைவா் கேகேயு.காதிா்வலி முஸ்தபா ஆலிம் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் வடகரை சாகுல் ஹமீது ஆலிம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT