தென்காசி

பாவூா்சத்திரம் பள்ளியில் வானவில் மன்றம் திட்டம் தொடக்கம்

29th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, அரசு பள்ளி மாணவா், மாணவிகளின் அறிவியல், கணித ஆா்வத்தை தூண்டும்வகையில், வானவில் மன்றம் என்ற பெயரில் புதிய திட்ட தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இரா.சாக்ரடீஸ் ஆகியோா் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினா். இதில், உதவி தலைமை ஆசிரியை வீரலட்சுமி, ஆசிரியைகள் ஷாம்லா தேவி, விஜயா மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆசிரியை லூா்துமேரி விமலா வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆனந்தலட்சுமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT