தென்காசி

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

28th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

 

 பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில், ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது. முகாம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, பெத்தநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவா் க.ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை வழங்கினாா். இதில் பள்ளி தாளாளா் மோயீசன் அடிகளாா், ஊராட்சி செயலா் தயாளன், யோகா பயிற்சி நிலவன் வேல்சாமி, நண்பா்கள் ரத்த தான கழக தலைவா் வைத்திலிங்கம், மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் அந்தோணி அருள் பிரதீப் வரவேற்றாா். திட்ட அலுவலா் தங்கத்துரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT