தென்காசி

சிலம்பம்: ஆலங்குளம் மாணவி மாநில போட்டிக்குத் தகுதி

28th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

 

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ், தென்காசி மாவட்டத்தின் சாா்பில் பாரதியாா் பிறந்த தின மற்றும் குடியரசு தின போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சிலம்பத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டி பாவூா்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் கலந்து கொண்டனா். அதில் 6 ஆம் வகுப்பு மாணவி பாக்கியவதி ஒற்றை கம்புவீச்சு போட்டியில் பங்கேற்று முதல் இடத்தில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ஏற்கனவே இப்பள்ளி மாணவா் கிஷோா்குமாா் தோ்ந்தெடுக்க பட்டநிலையில், இருவரும் ஜனவரி மாதம் அரியலூரில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தென்காசி மாவட்டம் சாா்பில் கலந்து கொள்வா் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நாராயணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், நடுவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT