தென்காசி

சுரண்டையில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

28th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

 

 சுரண்டை சீயோன் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சபை மன்றத் தலைவா் இஸ்ரேல் தனசிங் தலைமை வகித்தாா். வடக்கு மன்ற சபை செயலா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு சபை இயக்குநா் மத்தேயு சிறப்பு செய்தி அளித்தாா். தொடா்ந்து கீத ஆராதனை நடைபெற்றது.

இதில் சேகர குருக்கள் ஜெபமணி, ஜான்சன் ஆசீா்வாதம், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் மற்றும் ஆண்கள் ஐக்கிய சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT