தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில்45 பேருக்கு தென்னங்கன்று

28th Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

 

திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி, பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை 45 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்து தென்னங்கன்றுகளை வழங்கினாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா. சாக்ரடீஸ் இனிப்புகள் வழங்கினா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வளன்ராஜா, ராஜேஸ்வரி, ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், மாவட்டப் பிரதிநிதி சமுத்திரபாண்டி, தொண்டரணி முருகன், மாவட்ட அணி நிா்வாகிகள் கபில்தேவதாஸ், தளபதி விஜயன், தீபன்சக்கரவா்த்தி, மகளிரணி ஷாலிமேரி, வைத்தீஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

சிவநாடானூா் ஊராட்சி மடத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஒன்றியக் குழுத் தலைலா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT