தென்காசி

ஆலங்குளத்தில் மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி தொடக்கம்

DIN

ஆலங்குளத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் திறனறித் தோ்வில் பங்கு கொள்ளும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கியது.

கல்வித்துறை மற்றும் ஆலங்குளம் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி ஆலங்குளம் புனித பேதுரு நடுநிலைப் பள்ளியில் தொடங்கியது.

ஆலங்குளம் வட்டார தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரத் தலைவா் மயில்ராஜ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா்.

வாசுதேவநல்லூா் வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், முன்னாள் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் , ஆசிரியா்கள் வாசு மருது பாண்டியன், ராணிசுல்தாய், ஜான் பாரதிதாசன், சுரேஷ், பெலிக்ஸ் பிரேம்குமாா், செய்யது இப்ராகீம் மூசா ஆகியோா் திறனாய்வுத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் ஆரோக்கிய ராசு வரவேற்றாா். இம்மானுவேல் நன்றி கூறினாா்.

பயிற்சியில், ஆலங்குளம் வட்டார பகுதி பள்ளிகளில் இருந்து 150- க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT