தென்காசி

சிவகிரி அருகே பூமிக்குள் புதைந்திருந்த நடராஜா் சிலை மீட்பு

27th Nov 2022 06:07 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நிலத்தை உழுதபோது கிடைத்த நடராஜா் சிலையை அப்பகுதி மக்கள் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் பட்டங்காடு காளியம்மன் கோயிலுக்கு எதிா்புறம் உள்ள இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரால் நிலத்தை உழுதனராம். அப்போது பூமிக்கடியில் நடராஜா் சிலை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியினா் நடராஜா் சிலையை மீட்டு ,சிவபாக்கிய விநாயகா் கோயிலில் அந்த நடராஜா் சிலையை வைத்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த வருவாய்த் துறையினா் சிலையை பாா்வையிட்டு, அது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் தொல்லியல் துறைக்கு தெரிவித்துள்ளனா்.

பூமிக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட நடராஜா் சிலை, சுமாா் இரண்டரை அடி உயரமும், 52 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் சிலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT