தென்காசி

ஆலங்குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்

27th Nov 2022 06:07 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் திலகராஜ், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலா் அருள் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத் திறனாளிகளிடமிருந்து அவா்களுக்குத் தேவையான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இலவச பேருந்து சலுகை உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, 2 நபா்களுக்கு செவித்திறன் கேட்டல் கருவி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆலங்குளம் வட்டார வள மைய மாற்றுத் திறனாளிகள் சிறப்பு ஆசிரியா்கள் அருள் ஞானஜோதி, ஜெயஜோதி, பிரியா மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT