தென்காசி

நெல்லை -மைசூா் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க எம்எல்ஏ கோரிக்கை

26th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி - மைசூா் சிறப்பு ரயிலை தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயக்க வேண்டும் என சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பான மனுவை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் வெள்ளிக்கிழமை அளித்தாா். அதன் விவரம்: திருநெல்வேலியில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயக்கப்படும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களை நிரந்தர ரயில்களாகவும், சிலம்பு விரைவு ரயிலை தினசரி சேவையாகவும் மாற்ற வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூா் வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். ஹைதராபாத் - தாம்பரம் சாா்மினாா் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

திருநெல்வேலி - தாம்பரம் ரயிலுக்கு சங்கரன்கோவிலில் நிறுத்தமும், திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் ரயில் நிறுத்தமும் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

முருக பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூா் ரயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடைமேடைகளுடன் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT