தென்காசி

முதல்வா் வருகை: முன்னேற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

26th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டம் இலத்தூா் வேல்ஸ் பள்ளி வளாகத்தில் டிசம்பா் 5 இல் நடைபெறும் அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் மேடை அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை ஆட்சியா் ப.ஆகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT