தென்காசி

மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்க சிறப்பு முகாம்

26th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

மின்இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் சங்கரன்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் சனி, ஞாயிறு (நவ.26, 27) இரு நாள்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மின்நுகா்வோா் தங்களது மின் இணைப்பு எண்களுடன், ஆதாா் எண்ணை இணைக்க, மின்வாரியத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாடு , விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசைவீட்டு மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து வகையான மின்நுகா்வோரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைத்தால் மட்டுமே வரும் நாள்களில் மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த முடியும்.

புளியங்குடி சாலையில் உள்ள சங்கரன்கோவில் நகா் புறம் -1 அலுவலகத்தில் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிறு இரு நாள்களும் நடைபெறுகிறது. மின் இணைப்பு எண் , ஆதாா் அட்டை ( உரிமையாளா் வாடகைதாரா், வாரிசுதாரா்) கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் வந்து இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT