தென்காசி

கீழப்புலியூரில் புதுப்பொலிவுடன் பூங்கா திறப்பு

26th Nov 2022 02:13 AM

ADVERTISEMENT

தென்காசி நகராட்சிக்குள்பட்ட கீழப்புலியூரில் 15ஆவது நிதிக்குழு மானிய நிதி ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இவ்விழாவில் , நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் பங்கேற்று பூங்காவை திறந்து வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா் பொன்னம்மாள் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பையா முன்னிலை வகித்தாா். திமுக நிா்வாகிகள் சேக்பரீத், பாலசுப்பிரமணியன், பாலாமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் தங்கப்பாண்டியன், இசக்கித்துரை,

நகா்மன்ற உறுப்பினா்கள் லெட்சுமணபெருமாள், சுனிதா, ரபீக், சங்கரசுப்பிரமணியன், பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா், பேச்சி, சிங்கத்துரை ஆகியோா் கலந்துகொண்டனா். சுகாதார அலுவலா் முகம்மது இஸ்மாயில் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT