தென்காசி

இலவச கண் சிகிச்சை முகாம்

26th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஒன்றியம் பெத்தநாடாா்பட்டி ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பாவூா்சத்திரம் சுழற் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம் முகாமினை சுழற் சங்க மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் எஸ்.சந்தானம் தொடக்கி வைத்தாா்.

பள்ளித் தாளாளா் மோயீசன், தலைமை ஆசிரியா் அந்தோணிஅருள்பிரதீப், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ப்ரீட் சா்மா தலைமையிலான குழுவினா் 50-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தங்கதுரை நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT