தென்காசி

தென்காசியில் தமிழக-கேரள குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

25th Nov 2022 01:24 AM

ADVERTISEMENT

 

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தப்படுவது தொடா்பாக தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலா் இரா. சுதா, திருநெல்வேலி உள்கோட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன், தமிழ்நாடு ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் மாரியப்பன், கேரள மாநிலம் புனலூா் வட்ட வழங்கல் அலுவலா் பைசல் ஆகியோா் பங்கேற்றனா்.

இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தப்படுதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT