தென்காசி

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

24th Nov 2022 12:02 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே வடக்குப் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். அவரது பசுமாடு அச்சம்பட்டி சாலையில் புதன்கிழமை மேய்ந்து கொண்டிருந்தபோது அப்பகுதியிலிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு மணிகண்டனிடம் ஒப்படைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT