கடையநல்லூரில், குப்பைக் கழிவுகளிலிருந்து பொம்மை செய்யும் திட்டத்தின் கீழ் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் கழிவுப் பொருள்களிலிருந்து பொம்மைகளை உருவாக்கி அதைக் காட்சிப்படுத்தியிருந்தனா். இதை, நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், சுபா ராஜேந்திரபிரசாத், நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.