தென்காசி

ஆலங்குளம் உலக மீட்பா் ஆலயத் திருவிழா நிறைவு

21st Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை மறை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குளம் உலக மீட்பா் தேவாலயத்தில் திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவ நாள்களில் நாள்தோறும் காலையில் ஜெபமாலை, பிராா்த்தனை, சிறப்பு மறையுரையுடன் திருப்பலி, விவிலியப் போட்டிகள் நடைபெற்றன.

9ஆம் நாளான சனிக்கிழமை இரவு இயேசு கிறிஸ்து சொரூப அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா திருப்பலி, மாலையில் இன்னிசை நிகழ்ச்சி, நற்கருணை ஆசீா் நடைபெற்றது. இதையடுத்து, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை ஆலங்குளம் பங்குத்தந்தை எஸ்.எம். அருள்ராஜ், அடைக்கல அன்னை அருள்சகோதரிகள், புனித வின்சென்ட் தேவ பவுல் சபை இறைமக்கள் ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT