தென்காசி

தென்காசியில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

19th Nov 2022 02:08 AM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். செயலா்கள் பாதுஷா, நூா் முஹம்மது, அமைப்பு பொதுச்செயலா் திவான் ஒலி, பொருளாளா் ஹக்கீம், செயற்குழு உறுப்பினா் முஹம்மது அலி, நகரச் செயலா் ஷேக் ஜிந்தா மதாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் செய்யது மஹ்மூத் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலா் நிஜாம் முகைதீன் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனி அருள்சிங் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். நகரத் தலைவா் சீனா சேனா சா்தாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT