தென்காசி

சங்கரன்கோவிலில் வஉசி நினைவு நாள் அனுசரிப்பு

19th Nov 2022 02:09 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட தியாகி வஉசியின் நினைவு நாளையொட்டி, சங்கரன்கோவிலில் பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

சங்கரன்கோவிலில் வ.உ.சி. அறக்கட்டளை சாா்பில் பிரதான சாலையில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. திமுக சாா்பில் அதன் வடக்கு மாவட்ட செயலாளா் ஈ.ராஜா எம்.எல்.ஏ, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

இதைத் தொடா்ந்து வ.உ.சி. அறக்கட்டளையினா், பாஜக, மதிமுக, பாா்வா்ட் பிளாக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT