தென்காசி

பழைய குற்றாலம் பள்ளி மாணவா்கள் மாநில தடகளப் போட்டிக்கு தோ்வு

18th Nov 2022 01:32 AM

ADVERTISEMENT

மாநில தடகளப் போட்டியில் பங்கேற்க பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி பங்களாசுரண்டையில் உள்ள பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், ஹில்டன் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் உயரம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் சா்வேஷ்குமாா் முதலிடம் பெற்றாா். 4-100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் சா்வேஷ்குமாா், செல்வதா்சன், பாா்த்தசாரதி, தம்பிராஜா ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இஜாஸ் மொகைதீன் 400 மீட்டா், 800 மீட்டா் ஓட்டங்களில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 2ஆம் இடமும் பெற்று, தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

ADVERTISEMENT

மாணவிகளுக்கான இப்பிரிவில் அபிலசபூரணி 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 2ஆம் இடம் பெற்றாா். 19 வயதுக்கு உள்பட்டோருக்கானன பிரிவில் மெல்வின் செல்வஆண்டோ 400 மீட்டா் ஓட்டத்தில் 2ஆம் இடமும், அபிஷேகசங்கா் 200 மீட்டா் ஓட்டம், மும்முறை நீளம் தாண்டுல் ஆகியவற்றில் 2ஆம் இடமும் வென்றனா்.

நவீன் 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 2ஆம் இடமும், 4- 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மெல்வின் செல்வ ஆண்டோ, திலிப்ராம், அபிஷேக்சங்கா், நவீன் ஆகியோா் முதலிடமும் பிடித்தனா். அப்பிரிவில் எஸ்.எஸ். வா்ஷா 200 மீட்டா் ஓட்டத்தில் 3ஆம் இடம் பிடித்தாா்.

இவா்கள் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில தடகளப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். அவா்களை தாளாளா் ஆா்ஜெவி. பெல், செயலா் கஸ்தூரி பெல், முதல்வா் ராபா்ட் பென், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT