தென்காசி

சங்கரன்கோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

18th Nov 2022 01:31 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை (நவ. 19) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்ரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட மலையாங்குளம், செவல்குளம், சிதம்பராபுரம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், ஆலமநாயக்கன்பட்டி, மகாதேவா்பட்டி, குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குபட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம், குண்டம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

நக்கலமுத்தன்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட நக்கலமுத்தன்பட்டி, இளையரசநேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை பகுதிகளில் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT