கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள ஒன்றியக்குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். உறுப்பினா்கள் வளன்ராஜா, முருகேசன், தா்மராஜ், நாகராஜன், சுரேஷ்லிகோரி, சரவணன், ஜான்சி, நான்சி, ராதாகுமாரி, மகேஸ்வரி, அருமை, மேரி, ஹேமா, ராஜேஸ்வரி, புவனா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஊராட்சி ஒன்றியப் பொதுநிதியிலிருந்து 2022-23ஆம் ஆண்டில் ரூ. 71.76 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றியப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் பழுதுநீக்குதல், ஆவுடையானூா் ஊருணி சுற்றுச்சுவா் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.