தென்காசி

புனித அருளப்பா் பள்ளியில் குழந்தைகள் தின விழா

15th Nov 2022 01:48 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் புனித அருளப்பா் நா்சரி, தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் மோயீசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்லப்பா, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அந்தோணிஅருள்பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT