தென்காசி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

1st Nov 2022 02:42 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை திருக்கல்யாணத்தையொட்டி காலையில் அம்மன் தவசு மண்டபம் செல்லுதல், மாலையில் அம்மன் காட்சி அருளுதல், மாலை மாற்றும் வைபவம், இரவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT