தென்காசி

பண்பொழி திருமலைக் கோவிலில் தேரோட்டம்

1st Nov 2022 02:51 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் சூரசம்ஹார திருவிழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த சனிக்கிழமை (அக். 29) வண்டாடும் பொட்டலுக்கு திருமலைக்குமரன் எழுந்தருளும் வைபவம், பெரும் திருப்பாவாடை வைபவம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. திங்கள்கிழமை திருமலைக்குமரன் தேருக்கு எழுந்தருளும் வைபவமும், அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றன.

ADVERTISEMENT

கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம், உதவி ஆணையா் கோமதி, பண்பொழி பேரூராட்சித் தலைவா் ராஜராஜன், சிவஸ்ரீ ரமேஷ்பட்டா், அனைத்து சமுதாயத் தலைவா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT