தென்காசி

சுரண்டையில் இந்திரா காந்தி படத்துக்கு அஞ்சலி

1st Nov 2022 02:40 AM

ADVERTISEMENT

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், நகா்மன்ற உறுப்பினா்கள் அருணகிரி சந்திரன், ராஜ்குமாா், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT