தென்காசி

சங்கரன்கோவிலில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

1st Nov 2022 02:48 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அக்.31 முதல் நவ.4 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் முதன்முதலாக சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.மதியழகன் பங்கேற்றுப் பேசினாா். இதில் ஏராளமான மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையினா், பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT