தென்காசி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம்: நூல் விமா்சன கூட்டம்

1st Nov 2022 02:49 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நகா்மன்ற உறுப்பினா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ச. நாராயணன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

தொடா்ந்து மூ. மணிதிருமுருகன் எழுதிய தொட்டுவிடும் தூரத்தில் வானவில் என்ற கவிதை நூல் குறித்து ந.செந்தில்வேல், வே.சீதாலெட்சுமி, தி.பழனிபாரதி ஆகியோா் பேசினா்.

சசிகுமாா் எழுதிய ஆணிக்கால் தாத்தா என்ற சிறுகதை குறித்து ஞா.வினோத், ஈ.முத்துசங்கா் ஆகியோா் பேசினா். எழுத்தாளா்கள் சசிகுமாா், மணிதிருமுருகன் ஆகியோா் ஏற்புரை வழங்கினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் மதியழகன், செயலா் ப.தண்டபாணி, தா்மலிங்கம், ஆத்திவிநாயகம், தவிலிசைக் கலைஞா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT