தென்காசி

குருக்கள்பட்டியில் கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

1st Nov 2022 02:48 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி ராஜீவ் காலனியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது கிணற்றில் மயில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதையறிந்த ராமகிருஷ்ணன், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் கிடந்த மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT