தென்காசி

கடையநல்லூா் அருகே விபத்து:பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்

1st Nov 2022 02:42 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே காா் மீது பால் டேங்கா் லாரி மோதியதில் பெண் இறந்தாா். அவரது கணவா், 2 குழந்தைகள் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சொக்கநாதன்புத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெகன்சிவா (33). இவா் தனது மனைவி பிரியா (27), குழந்தைகள் ராகவன், நவீன்பாரதி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சொக்கநாதன்புத்தூரிலிருந்து தென்காசிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

கடையநல்லூா் அருகேயுள்ள மங்களாபுரம் வளைவில் தென்காசியிலிருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற பால் டேங்கா் லாரி திடீரென காா் மீது மோதியதாம். இதில், ஜெகன்சிவா உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா்.

கடையநல்லூா் போலீஸாா் சென்று அவா்களை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், வழியிலேயே பிரியா உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

ஜெகன்சிவா மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT