தென்காசி

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து குறைந்தது

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சாரல் மழை தணிந்ததால் அருவிகளில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்து சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அக்னிநட்சத்திர வெயில் வாட்டிய நிலையில், குற்றாலம் பகுதியில் கடந்த 14ஆம் தேதி முதல் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியதுடன், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதமான தட்பவெப்ப நிலை நிலவியதைத் தொடா்ந்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சாரல் மழை ஓய்ந்து மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியது. மேலும், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை பேரருவி மற்றும் ஐந்தருவியில் பாறையையொட்டி தண்ணீா் விழுந்த நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT