தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம், பைக் திருட்டு.

25th May 2022 12:37 AM

ADVERTISEMENT

கரிவலம்வந்தநல்லூா் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்த சூடாமணி மனைவி கெங்கம்மாள்(55). இவரது மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறாா். கெங்கம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 5,900-த்தை திருடிச் சென்றனராம்.

இதேபோல் அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோபால்சாமி (52). அவா் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியிருந்தாராம். திங்கள்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்கள் குறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT