தென்காசி

சுரண்டை நகா்மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டை நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் லெனின் முன்னிலை வகித்தாா்.

நகராட்சியில் 10 இடங்களில் புதிதாக சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி அமைக்கவும், பழுதான குடிநீா்த் தொட்டிகளை சரிசெய்யவும் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, சொத்துவரி குறித்த தீா்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது. அப்போது, சொத்து வரி உயா்வு, கட்டட அனுமதி வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக உறுப்பினரும் துணைத் தலைவருமான சங்கராதேவி, அதிமுக உறுப்பினா்கள் மாரியப்பன், ராஜேஷ், சக்திவேல், வசந்தன், பொன்ராணி மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் முன்னிலையில் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT