இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கோட்டை வட்டார 26ஆவது மாநாடு செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். சுந்தா், மாரிதங்கம் ஆகியோா் முன்னிலைவகித்தனா். வட்டார செயலா் மாரியப்பன் வரவேற்றாா். ஏஐடியூசி மாவட்ட கௌரவத் தலைவா் சாமி கட்சி கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் இசக்கித்துரை, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் சுப்பையா, மாநிலக்குழு உறுப்பினா்கள் பிஎஸ்எஸ் போஸ், வேலாயுதம் ஆகியோா் பேசினா்.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கொண்டுசெல்லப்படும் கனிமவளங்களை தடுத்து நிறுத்திட வேண்டும், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும், வீட்டு வரி உயா்வை நிறுத்திவைக்க வேண்டும்,
செங்கோட்டை வாரச்சந்தை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.