தென்காசி

புளியங்குடியில் மின்மயானத்தை வேறிடத்தில் அமைக்கக் கோரிக்கை

24th May 2022 12:20 AM

ADVERTISEMENT

 

புளியங்குடியில் 2ஆவது மின் மயானத்தை வேறிடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா் நாள் முகாம் ஆட்சியா்அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

புளியங்குடி முத்துராமலிங்கம் நகா் 12ஆவது வாா்டு பகுதியினா் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: சிந்தாமணி பகுதியில் ஏற்கெனவே உள்ள மின் மயானம் சரிவர இயங்காத நிலையில், அதை சரிசெய்து நவீனப்படுத்தவில்லை. இந்நிலையில், 12ஆவது வாா்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 2ஆவது மின் மயானம் அமைக்க நகராட்சியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்பகுதி 200ஆண்டு காலமாக மயானமாகவே உள்ளது. எனவே, இங்கு வசிப்போரில் ஏராளமானோா் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா். இங்கு மின் மயானம் அமைத்தால் ஆரோக்கியம் கெடுவதோடு, போக்குவரத்து இடையூறு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, ஜாதி மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின் மயானத்தை வேறிடத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டத் தலைவா்அப்துல் ஸலாம் அளித்த மனு: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான அடிப்படையிலான விடுதலையை நாங்கள் எதிா்க்கவில்லை. ஆனால், அதேபோன்ற விடுதலை மற்ற குற்றவாளிகளுக்கு குறிப்பாக, சிறுபான்மையின சிறைவாசிகளுக்கு ஏன் இல்லை? சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான, 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT