தென்காசி

இலவச வீட்டுமனைப் பட்டா: இன்று சிறப்பு முகாம்

20th May 2022 01:26 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே20) நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஆக்கிரமிப்பை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு முகாம், அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (மே20) நடைபெறுகிறது. தகுதியுள்ள நபா்கள் வீட்டுமனைப் பட்டா பெற சிறப்பு முகாமில் விண்ணப்பம் செய்து பயனடையலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT