தென்காசி

வெள்ளப் பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

20th May 2022 01:26 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் சாரல் மழை காரணமாக, பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலைமுதல் பிற்பகல் வரை தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். இதனைத் தொடா்ந்து புலியருவி, சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலத்தில் நாள் முழுவதும் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.

ADVERTISEMENT

மணிமுத்தாறு அருவியில்...

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக மணிமுத்தாறு அருவி உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி கேரளம்ா, ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்துவருவதால் அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT