கடையநல்லூா் அருகே மலைவாழ் மக்கள் வசிப்பிடத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கடையநல்லூா் அருகே கருப்பாநதி அணை பகுதியில் கலைமான் நகரில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு, குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் , போக்சோ சட்டம், இணையதளம் மூலமாக நடைபெறும் சைபா் கிரைம் குற்றங்கள் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் , கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் , துணை கண்காணிப்பாளா்(பயிற்சி) கிரிஷ்யாதவ் , கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சூரியமூா்த்தி ஆகியோா் விளக்கமளித்தனா்.
ADVERTISEMENT