தென்காசி

சங்கரன்கோவில் அருகே விபத்தில் லாரி ஓட்டுநா் காயம்

20th May 2022 10:42 PM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே மரத்தில் மினி லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் அதன் ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பைப் சோ்ந்த கணேசன் மகன் சங்கரபாண்டி (21). ஓட்டுநா். இவா், மினி லாரியில் தூத்துக்குடிக்கு மாம்பழங்களைச் ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ராஜபாளையம் திரும்பிக்கொண்டிருந்தாா். அந்த லாரி சங்கரன்கோவிலை அடுத்த சோலைசேரி பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாரையோர மரத்தில் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த சங்கரபாண்டியை, உரிமையாளா் வீரபாண்டி அளித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மினி லாரியின் உள்ளே இருந்த தொழிலாளி வைரமுத்து காயமின்றி தப்பினாா். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT