ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தின் 25ஆவது பிரதிஷ்டை விழா 3 தினங்கள் நடைபெற்றது.
இதையொட்டி ஆலயத்தில் மே 13,14 ஆகிய இரு தினங்கள் இரவு ஜெபக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், போதகா் சுசி பிரபாகரதாஸ் இறை செய்தி அளித்தாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதிஷ்டை மற்றும் திருவிருந்து ஆராதனையில் போதகா் அமிா்தநாயகம் செய்தி அளித்தாா். மதியம் அசன விருந்து நடைபெற்றது. அனைத்து ஆராதனைகளிலும் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனா். சேகரத் தலைவா் வில்சன், சபை ஊழியா் ஸ்டீபன், சேகர நிா்வாகிகள் ஜான்ரவி, ஏசுராஜா மற்றும் சபை மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.