தென்காசி

செங்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

16th May 2022 05:18 AM

ADVERTISEMENT

 

மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம், செங்கோட்டை பாரத் கேஸ் ஏஜென்ஸி, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம், செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டப வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுடா்ஒளி ராமதாஸ், சரஸ்வதி, முத்துப்பாண்டி, பாரத் கேஸ் மேலாளா் சுவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கேந்திர சகோதரிகள் வேல்விழி, பத்ரகாளி, முருகேஸ்வரி ஆகியோா் இறைவணக்கம் பாடினா். முகாமில் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டு கண்பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினா்.

ADVERTISEMENT

முகாமில் 258 போ் கலந்து கொண்டனா். 46 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, இலவசமாக கண்அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். 42 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

விவேகானந்தா கேந்திர மாவட்டபொறுப்பாளா் கருப்பசாமி வரவேற்றாா். கேந்திர மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் கோமதிநாயகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT