தென்காசி

குற்றாலம் அருவிகளில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்:சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

16th May 2022 05:19 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தண்ணீா் விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து மெல்லிய சாரல் நிலவி வருகிறது. சனிக்கிழமை இரவு தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் தண்ணீா் விழத் தொடங்கியது.

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவு மீதும், ஐந்தருவியில் நான்குகிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது இதமான வெயிலும், மெல்லிய சாரலும், நாள் முழுவதும் குளிா்ந்த காற்றும் வீசும் சூழல் நிலவியது. இதேநிலை நீடித்தால் விரைவில் சீசன் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT