தென்காசி

மேலப்பாவூரில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்

12th May 2022 02:27 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம்: மேலப்பாவூரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கீழப்பாவூா் ஒன்றியம், மேலப்பாவூா் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் கனகஜோதி முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா் பங்கேற்று, அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சித் தலைவா் பாபநாசம், ஊா் பிரமுகா்கள் பூல்பாண்டியன், குமாா், பேச்சிமுத்து மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் நாகராஜ், தா்மராஜ், திமுக நிா்வாகிகள் டால்டன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்து மருதையா வரவேற்றாா். துணைத் தலைவா் தங்கசேது நன்றி கூறினாா்.

முன்னதாக மேலப்பாவூரில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தையும் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT